Sunday 28 August 2011

எதற்காக புகைப்படக்கலை




நீங்கள் பார்க்கும் எதுவும் மற்றவர்களால் பார்க்க முடியாதது அல்லது பார்த்திராத ஒன்றும் அல்ல என்பது எவ்வளவு உண்மையோ அதைப்போன்றே நீங்கள் பார்க்கும் எதுவும் உங்கள் கோணத்தில் மற்றவர்களால் காண முடியாத ஒன்று என்பதும் உண்மை. உங்களால் எதை கண்டாவது பிரமிக்க முடிந்தால், அது உங்கள் பார்வையில் ஒரு அற்புதமான விஷயம். அதை உங்கள் மனம் மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும். உங்களுக்கு அது எப்போதும் திகட்டாத ஒன்றாகவே இருக்கும். நீங்கள் கண்களை மூடிக்கொண்டு உங்களின் அற்புதமான அந்த விஷயத்தை உருவகப்படுத்திப் பாருங்கள். ஒவ்வொரு முறையும் அதன் தோற்றம் வித்தியாசமாகவேத் தோன்றும். ஒரு போதும் உங்களால் ஒரே மாதிரியாக உருவகப்படுத்த முடியாது. எல்லாவிதத்திலும் உருவகப்படுத்திய பின் ஏதோ ஒன்று மட்டும் அதிக அற்புதமாக இருந்திருக்கும், அதை மட்டும் மீண்டும் மனக்கண்ணில் கொண்டு வாருங்கள்......முடியவே முடியாது. இழந்து விட்டீர்கள் அந்த அற்புதமான அதன் பிம்பத்தை. அதன் நிழலை, அதன் எதிரொலிப்பை. எப்படி விவரிப்பீர்கள் அதனை. தொலைந்து போகவிடாதீர்கள் உங்கள் கண் கண்ட அந்த அற்புதத்தை. உங்கள் விழியில் கண்டதை விருந்தாக்குங்கள். உங்களின் பார்வை உங்களை உங்களுக்கே புதிதாக அறிமுகப்படுத்தும்.....உயர்வாகவே. தொடர்ந்து பேசுவோம்.